சிந்தையில் எண்ணிய அனைவருக்கும் சிறப்பான வாழ்க்கை அருளும் சிவவாக்கியர்

சிவவாக்கியர் 18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் ஆனால் அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.ஆனால் அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்ற கருத்தே எல்லா இடங்களிலும் சொல்லப்படுகிறது.பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் இவர் வரலாறு கூறுகிறது. சிவவாக்கியர் இயற்றிய சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரைக்கும் 526 பாடல்கள் கிடைத்துள்ளன. 18 சித்தர்களில் இவர் இயற்றிய பாடல்களே மிக அதிகம் என்றும் ஒரு கருத்து […]

சிவவாக்கியர் 18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் ஆனால் அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.ஆனால் அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் தான் என்ற கருத்தே எல்லா இடங்களிலும் சொல்லப்படுகிறது.பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் இவர் வரலாறு கூறுகிறது.

சிவவாக்கியர் இயற்றிய சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரைக்கும் 526 பாடல்கள் கிடைத்துள்ளன. 18 சித்தர்களில் இவர் இயற்றிய பாடல்களே மிக அதிகம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

இவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள அபிதான சிந்தாமணியையும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியை படித்தாலே போதும். ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் அதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்களுக்கு தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சிவ வாக்கியர் வாழ்ந்த இடம் மட்டுமல்ல அவர் வாழ்ந்த காலம் பற்றியும் தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனாலும் சில குறிப்புகள் இவரின் காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பல இடங்களில் திருமூலரை போல் உள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் என்ற ஆய்வாளர் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பல இடங்களில் அந்த காலத்தில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரை போல் உள்ளது எனவும்; இல்லை, சிவ வாக்கியரும் திருமழிசை ஆழ்வாருமே ஒருவர் தான் என்றெல்லாம விவாதிப்பவர்களும் உண்டு.

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர்தான் சிவவாக்கிய சித்தர். சிவவாக்கியர் சித்தியடைந்தது கும்பகோணத்தில் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஆனால், அவர் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் வாசம் செய்து மூலவர் வள்ளி சுப்பிரமணியரை அன்றாடம் பூஜித்து வந்திருக்கிறார் என்பது அந்நூல்கள் சொல்லாத செய்தி.

இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அந்தக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார். அவரோடு கொஞ்சநாள் இருந்தார். அவரிடமிருந்து ஆசியாய் பெற்ற ஒரு சில நாணயங்கள் மற்றும் அவர் கொடுத்த கசந்த சுரையோடு கங்கையில் ஏற்பட்ட சில அற்புதமான சம்பவங்களுக்கு பிறகு ஊருக்கு திரும்பினார். அங்கு வந்து காசி முனிவர் கூற்றுப்படி அதை பக்குவமாக சமைக்கும் ஒரு குறவ பெண்ணை மணந்து அந்த ஊரிலேயே காட்டு வேலை செய்து எவ்வித சிற்றின்பங்களுக்கும் ஆட்படாமல் நீண்டநாள் மகழ்ச்சியாக வாழ்ந்தார்.

தான் அன்றாடம் சந்தித்த மக்களது நடவடிக்கைகளைக் கண்டு வேதனைப்பட்ட சிவவாக்கியர் அவ்வப்போது பாடிய பாடல்களே பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுச் சிவவாக்கியம் என்ற பெயரைப் பெற்றது. தன் பாடல்கள் எல்லாம் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களை அதன் படைப்புகளை ஆழ அகழ்ந்தறிந்து தான் இயற்றிய பாக்களில் கலந்து தந்துள்ளார். இவருடைய செய்யுள் பாக்களில் எல்லாம் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும் கொண்டு அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இவருடைய செய்யுள்பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்கள் அதிகம் இருக்கும். இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கொடுத்தல் மறு பிறவி உண்டு நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாய வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், போலி சாமியார்கள் என பலரையும் கடுமையாகச் விமர்சித்துள்ளார்.

சிவவாக்கியர் ஐ மனமுருகி வணங்கினால் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரகதோஷங்களை நீக்குவார். மனம் தெளிவாக இருந்தது. மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால், மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால், சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால் நடக்கும். மேலும் இவரை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு,

  1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.
  2. எதிலும் முடிவெடுக்க முடியாமல், சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதும், தவறான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பதும் நீங்கி, தெளிவாக முடிவெடுக்க முடியும்.
  3. சஞ்சல புத்தி நீங்கும்.
  4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
  5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தாய், மகன் மகள் பிரச்சனைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். சிவக்கியர் பி கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது
1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu