அரசுத் திட்டங்களை மக்களுக்கே நேரில் கொண்டு செல்லும் நோக்குடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் செயல்படுகிறது.
கடலூர் சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் இந்த திட்டத்தின் கீழ் நவம்பர் வரை 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். நகர்ப்புறத்தில் 3,768 மற்றும் ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் அமைக்கப்படுகின்றன. முகாம்களுக்கு வருபவர்கள் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சேவைகளும் பெற முடியும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. 1 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக மக்களின் நலனை நேரடியாகக் கவனிக்க இந்த திட்டம் அரசு மற்றும் மக்களுக்கிடையே பாலமாக செயல்படும்.