ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை விதித்த தாலிபன் அரசு

July 31, 2023

ஆப்கானிஸ்தானில் தற்போது சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசை இசைப்பதற்கும் தடை விதித்துள்ளது. தாலிபான் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அரசு பெண்களுக்கு எதிரான பல தடைகளை விதித்து வரும் நிலையில் தற்போது இசைக்கும் தடைகளை விதித்துள்ளது. ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்க கேடானதாக கருதி பல்வேறு இசைக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு இசைக்கருவிகளையும் மற்றும் அது சார்ந்த உபகரணங்களையும் தாலிபான்கள் தீயிட்டு எரித்தனர். மேலும் இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் […]

ஆப்கானிஸ்தானில் தற்போது சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசை இசைப்பதற்கும் தடை விதித்துள்ளது.

தாலிபான் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அரசு பெண்களுக்கு எதிரான பல தடைகளை விதித்து வரும் நிலையில் தற்போது இசைக்கும் தடைகளை விதித்துள்ளது. ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்க கேடானதாக கருதி பல்வேறு இசைக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு இசைக்கருவிகளையும் மற்றும் அது சார்ந்த உபகரணங்களையும் தாலிபான்கள் தீயிட்டு எரித்தனர். மேலும் இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழி தவற செய்கிறது என நல்லொழுக்க மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான்-அல்-முஹாஜிர் கூறியுள்ளார்.

மேலும் இதைத் தொடர்ந்து பல டாலர் மதிப்புள்ள இசைக்கருவி கிட்டார், இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை ட்ரம்ஸ் ஒலிபெருக்கிகள் மற்றும் இதர உபகரணங்களை தாலிபன் அரசு அதிகாரிகள் எரித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu