ரஷ்யாவில் இருந்து கோதுமை, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தாலிபான்கள் ஒப்பந்தம்

September 29, 2022

ரஷ்யாவில் இருந்து கோதுமை, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் தாலிபான்கள் கையெழுத்திட்டு உள்ளனர். இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் கோதுமை ஆகிய பொருட்கள், சலுகை விலையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். ரஷ்யாவின் ரூபிளில் இந்த வர்த்தகம் அமையும்" என்று கூறினார். சலுகை விலையில் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்ட போதும், விலை மற்றும் கட்டண முறை குறித்து தாலிபான்கள் விவரங்கள் எதையும் […]

ரஷ்யாவில் இருந்து கோதுமை, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் தாலிபான்கள் கையெழுத்திட்டு உள்ளனர். இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் கோதுமை ஆகிய பொருட்கள், சலுகை விலையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். ரஷ்யாவின் ரூபிளில் இந்த வர்த்தகம் அமையும்" என்று கூறினார். சலுகை விலையில் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்ட போதும், விலை மற்றும் கட்டண முறை குறித்து தாலிபான்கள் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த காரணத்தால், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. அதன் காரணமாக, ரஷ்யா, ஆசிய சந்தையை நாடி உள்ளது. அதே வேளையில், ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றில் முன்னேற்றம் அடைவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். அதன் பகுதியாக, ரஷ்யாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைக்கு தாலிபான்கள் சார்பில் ரஷ்யாவிற்கு பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர். அதன் விளைவாக, தற்போதைய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் உடன் வர்த்தகம் செய்ய வேறு சில நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான், உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்டிருந்தது. ரஷ்ய நாட்டுடன் ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம், ஆப்கானிஸ்தான் மீதான பிம்பம் மாறியுள்ளது. இதன் பிறகு, அந்த நாடு பிற உலக நாடுகளுடன் இணக்கமாகச் செயல்படும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து, ஐநா சபையின் பாதுகாப்பு செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி காணப்படவில்லை. நடப்பு ஆண்டின் வருவாய் கடந்த ஆண்டின் வருவாயை ஒத்ததாகவே உள்ளது. நிலக்கரி மற்றும் பழங்கள் ஏற்றுமதியில் மட்டும் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. ஆட்சி மாற்றம் மட்டுமல்லாது நிலநடுக்கம், மற்றும் இயற்கை பேரழிவுகளாலும் ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலை பின் தங்கியுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், பல புதிய வர்த்தகக் சீரமைப்புகளால் ஆப்கானிஸ்தானின் பொருளாதார நிலை முன்னேறும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu