தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றும் கிராமத்து அளவில் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை உலகம் அறிய செய்வதற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் கிரிக்கெட் தொடர் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. இதுவரை 7 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் 8வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டி சேலம், நெல்லை, கோவை, நத்தம், சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லி, கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது தகுதி சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு முந்திய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி இறுதிப்போட்டியானது ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான பரிசுத்தொகை 1.7 கோடியாகும். இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 50 லட்சம், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூபாய் 30 லட்சம் வழங்கப்படுகிறது