பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

September 22, 2022

பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் சமீப காலத்தில் பலமடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் அரசு தரவுபடி, பாகிஸ்தானில் உள்ள 200 மில்லியன் மக்கள் தொகையில் 10,418 திருநங்கைகள் உள்ளனர். இவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதால் ,வன்முறைக்கு ஆளாகி பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். சமீபத்தில் செப்டம்பர் 11 அன்று, ராவல்பிண்டியில் ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று திருநங்கைகள் மற்றும் அவர்களது ஓட்டுனர் காயமடைந்தனர். அதேபோல் அங்குள்ள ரேஸ்கோர்ஸ் போலீஸ் […]

பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் சமீப காலத்தில் பலமடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் அரசு தரவுபடி, பாகிஸ்தானில் உள்ள 200 மில்லியன் மக்கள் தொகையில் 10,418 திருநங்கைகள் உள்ளனர். இவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதால் ,வன்முறைக்கு ஆளாகி பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். சமீபத்தில் செப்டம்பர் 11 அன்று, ராவல்பிண்டியில் ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று திருநங்கைகள் மற்றும் அவர்களது ஓட்டுனர் காயமடைந்தனர். அதேபோல் அங்குள்ள ரேஸ்கோர்ஸ் போலீஸ் எல்லையில் அமீர் மசிஹ் என்ற திருநங்கை கொலை செய்யப்பட்டார். கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் மஜித் என்ற திருநங்கை அடையாளம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டார் . மேலும் ஒ௫ தி௫நங்கை துப்பாக்கி சூட்டில் பலியானார். அதுமட்டுமின்றி கைபர் பக்துன்க்வாவில் உள்ள மன்சேராவில் எதிர்பாராத துப்பாக்கி சூட்டில் ஐந்து திருநங்கைகள் பலத்த காயம் அடைந்ததாக செய்தி வெளியானது. இதற்கிடையில் அவர்களுக்கு பாகிஸ்தானில் வாழும் உரிமை, கல்வி உரிமை, சமமான வேலை வாய்ப்பு உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. திருநங்கைகளின் இந்த நிலமையை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதனைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து ஆசிய-பசிபிக் குடிமை விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜோசப் பெனடிக்ட் ௯றியதாவது , அரசானது, இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் கொலைகளை விசாரிக்க வேண்டும் என்றும் திருநங்கைகளுக்கு எதிரான இத்தகைய அநீதிகளை ஒழிக்கவேண்டும் என்றும் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu