காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் சுட்டனர்

April 24, 2023

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்ட அந்த நேரத்தில் 3 பக்கங்களிலிருந்து தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 36 ரவுண்டுகள் அவர்கள் துப்பாக்கியால் வாகனத்தை நோக்கி சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி […]

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் ஏகே-47 துப்பாக்கியால் 36 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது கடந்த வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்ட அந்த நேரத்தில் 3 பக்கங்களிலிருந்து தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். குறைந்தபட்சம் 36 ரவுண்டுகள் அவர்கள் துப்பாக்கியால் வாகனத்தை நோக்கி சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சீனாவில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தவிர, தீவிரவாதிகள் இரண்டு கையெறி குண்டுகளையும் வீசியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து 5 வீரர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu