2024 ல் 32 பில்லியனை இழந்த உலகப் பணக்காரர்

December 23, 2024

உலகின் மிகப் பெரிய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான எல்விஎம்ஹெச்-யின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், தனது செல்வத்தில் கணிசமான அளவு இழப்பை சந்தித்துள்ளார். 2024ஆம் ஆண்டில் மட்டும் 32 பில்லியன் டாலர்களை இழந்து, உலகின் 5வது பணக்காரர் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகின் முதல் பணக்காரராக இருந்த அவர், இந்த ஆண்டு மே மாதம் வரை தனது செல்வத்தை உயர்த்தி வந்தாலும், அதன்பின் எல்விஎம்ஹெச் பங்குகளில் ஏற்பட்ட […]

உலகின் மிகப் பெரிய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான எல்விஎம்ஹெச்-யின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், தனது செல்வத்தில் கணிசமான அளவு இழப்பை சந்தித்துள்ளார். 2024ஆம் ஆண்டில் மட்டும் 32 பில்லியன் டாலர்களை இழந்து, உலகின் 5வது பணக்காரர் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகின் முதல் பணக்காரராக இருந்த அவர், இந்த ஆண்டு மே மாதம் வரை தனது செல்வத்தை உயர்த்தி வந்தாலும், அதன்பின் எல்விஎம்ஹெச் பங்குகளில் ஏற்பட்ட 20% வீழ்ச்சியால் 54 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.

தற்போது உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் அர்னால்ட் மட்டுமே ஆடம்பரப் பொருட்கள் துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் லாரி எலிசன் ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளனர். எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் நிதி அதிகாரி ஜீன்-ஜாக் குயோனி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்பட்டதே எல்விஎம்ஹெச் சரிவுக்கு காரணம் என்று கூறுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu