கோவிட் இடைவெளிக்குப் பிறகு ஸ்பெயினில் 'டொமடினா' தக்காளி திருவிழா

September 1, 2022

ஸ்பெயினின் புகழ்பெற்ற 'டொமடினா' தெரு தக்காளி திருவிழா கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நடந்தது. ஸ்பெயினின் புகழ்பெற்ற 'டொமடினா' தெரு தக்காளி திருவிழா நடைபெற்றது. டிரக்குகளில் தொழிலாளர்கள் 130 டன் அளவுக்கு அதிகமாக பழுத்த தக்காளிகளை கிழக்கு நகரமான புனோலின் பிரதான தெருவில் பங்கேற்பாளர்கள் வீசுவதற்காக இறக்கினர். இதனால் அந்த பகுதி சிவப்பு நிற கூழாக காட்சி அளித்தது. இந்த விழாவில் 20,000 பேர் வரை பங்கேற்க முடியும். […]

ஸ்பெயினின் புகழ்பெற்ற 'டொமடினா' தெரு தக்காளி திருவிழா கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நடந்தது.

ஸ்பெயினின் புகழ்பெற்ற 'டொமடினா' தெரு தக்காளி திருவிழா நடைபெற்றது. டிரக்குகளில் தொழிலாளர்கள் 130 டன் அளவுக்கு அதிகமாக பழுத்த தக்காளிகளை கிழக்கு நகரமான புனோலின் பிரதான தெருவில் பங்கேற்பாளர்கள் வீசுவதற்காக இறக்கினர். இதனால் அந்த பகுதி சிவப்பு நிற கூழாக காட்சி அளித்தது.

இந்த விழாவில் 20,000 பேர் வரை பங்கேற்க முடியும். சலுகைக்காக ஒரு டிக்கெட்டுக்கு 12 யூரோக்கள் செலுத்தினர். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன் கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி, 1945 ஆம் ஆண்டு, தக்காளி விளையும் பகுதியில் அமைந்துள்ள நகரத்தில், உள்ளூர் குழந்தைகளுக்கிடையே நடந்த உணவு சண்டையால் ஈர்க்கப்பட்டது.

1980 களில் கிடைக்கப்பெற்ற ஊடக கவனம் காரணமாக அது ஒரு தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வாக மாறியது. இந்த நிகழ்ச்சி உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பங்கேற்பாளர்களை ஈர்த்தது.
ஆசிய நாடுகளில் கோவிட்-19 தொடர்பான அச்சம் காரணமாக, இந்த ஆண்டு குறைவான வெளிநாட்டுப் பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு கொண்டாட்டம் நிகழ்வின் 75 வது ஆண்டு விழா ஆகும். மேலும் இந்த நிகழ்வு
ஸ்பெயினால் சர்வதேச சுற்றுலா ஈர்ப்பாக அறிவிக்கப்பட்ட 20வைத்து ஆண்டு விழாவாக உள்ளது குறிப்பிடத்தக்க்து.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu