ஜப்பானில் லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியது

December 13, 2023

ஜப்பானில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. ஜப்பான் அருகே ஹகோ டேட் தீவு உள்ளது. இது பிரபல சுற்றுலா தலமாகும். இங்கு கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது ஏராளமான மீன்கள் இறந்து போய் கரையில் ஒதுங்குகின்றன. முதலில் ஆயிரக்கணக்கில் மீன்கள் கரை ஒதுங்கியது. பின்னர் லட்சக்கணக்கில் உயர்ந்தது. புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என்று […]

ஜப்பானில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

ஜப்பான் அருகே ஹகோ டேட் தீவு உள்ளது. இது பிரபல சுற்றுலா தலமாகும். இங்கு கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது ஏராளமான மீன்கள் இறந்து போய் கரையில் ஒதுங்குகின்றன. முதலில் ஆயிரக்கணக்கில் மீன்கள் கரை ஒதுங்கியது. பின்னர் லட்சக்கணக்கில் உயர்ந்தது. புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மீன்கள் எவ்வாறு இறந்தன என்பது குறித்து விசாரணை நடத்த ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து உள்ளனர். அதன் முடிவு வெளிவந்த பின்னரே மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu