வெள்ளபெருக்கின் காரணமாக கடந்த 9 நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.தேனி மாவட்டத்தின் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கும்பக்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டகானல் மற்றும் அருவி நீர் பிடிப்பு பகுதியில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வன துறை தடை விதித்தது. தடை நீட்டிக்கப்பட்ட நிலையில் 9 நாட்களை அடுத்து இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.














