ஓமன், அமீரகத்தில் 7-ந் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

July 3, 2024

இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வருகிற ஏழாம் தேதி ஓமன் மற்றும் அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வருட பிறப்பு வரும் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இதன் பெயர் ஹிஜ்ரி 1446 ஆகும். இதையொட்டி ஓமன் மற்றும் அமீரக அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வருகிற ஏழாம் தேதி தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை […]

இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வருகிற ஏழாம் தேதி ஓமன் மற்றும் அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருட பிறப்பு வரும் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இதன் பெயர் ஹிஜ்ரி 1446 ஆகும். இதையொட்டி ஓமன் மற்றும் அமீரக அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வருகிற ஏழாம் தேதி தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை தினமாகும்.

ஓமன் நாட்டில் இதே போன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத் துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை நாட்களாகும். எனவே அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu