ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று நாடு திரும்பியுள்ளார். அதனை தொடர்ந்து, ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இன்று, பெரும்பாலான உக்ரைன் நகரங்கள் மீது, ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடந்ததால், உக்ரைனில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கீவ் நகரில் 9 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், உக்ரைனின் தென்கிழக்கு நகரமான Zaporizhzhia நகரும் தாக்குதலை எதிர்கொண்டது. இங்கு ஒருவர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பலர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகள் பல தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "பொதுமக்கள் மீது வெளிப்படையாக தாக்குதல் நடத்தும் அளவிற்கு ரஷ்யா சென்றுள்ளது" என கூறியுள்ளது.














