காசாவுக்கு தேவையான வாழ்வாதார பொருட்களை தடை இன்றி கிடைக்கச் செய்யும் தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்டது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காசாவுக்கு தேவையான வாழ்வாதார பொருட்கள் தடையின்றி கிடைக்க செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசாவில் இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகள் விரைவாக சென்று சேர மற்றும் மக்கள் பசியில் இருந்து விடுபட ஏற்ற ஒரு தீர்மானத்தை ஒரு மனதாக ஐநா பாதுகாப்புக்கு கவுன்சில் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஒரு வார கால தாமதத்திற்கு பின் அமெரிக்க ஆதரவளித்துள்ளது. முன்னதாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரு தீர்மானங்களை அமெரிக்கா ரத்து செய்தது.
இந்த தீர்மானத்தில் உடனடி போர் நிறுத்தும் என்கிற வாக்கியம் நீக்கப்பட்டதால், இது வலுவில்லா தீர்மானம் என ரஷ்யா விமர்சித்து வாக்களிப்பை தவித்தது. 15 நிரந்தர உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 13-0 என்ற கணக்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த உதவிகள் போதாது என்று ஹமாஸ் கருத்து தெரிவித்துள்ளது.