வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி - அமெரிக்கா

January 10, 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புக்கு 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புக்கு 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர், முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu