வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றி  -  700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அறிவிப்பு

November 30, 2022

கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடர், கத்தாரில் நடந்து வருகிறது. இதில் ஈரான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஈரானின் இந்த வெற்றி, உலகக் […]

கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடர், கத்தாரில் நடந்து வருகிறது. இதில் ஈரான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஈரானின் இந்த வெற்றி, உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை ஈரான் அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது ஈரான் நீதித் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “இந்த நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து 709 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu