சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

September 20, 2022

சென்னையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. சாதாரண காய்ச்சலை போல் அல்லாமல் எச்1என்1 காய்ச்சலாக இருப்பதால் குணமாக 5 முதல் 7 நாட்கள் வரை ஆகிறது. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 25 கூடுதல் படுக்கைகளுடன் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை […]

சென்னையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. சாதாரண காய்ச்சலை போல் அல்லாமல் எச்1என்1 காய்ச்சலாக இருப்பதால் குணமாக 5 முதல் 7 நாட்கள் வரை ஆகிறது. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 25 கூடுதல் படுக்கைகளுடன் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்கனவே உள்ள காய்ச்சல் வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகள் மட்டுமின்றி முதியவர்களையும் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் வந்தால் பீதியடைய தேவையில்லை என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எழிலரசி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu