அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான விசா நடைமுறைகள் காரணமாக இந்தியர்களின் அமெரிக்கா பயணம் குறைந்துள்ளது. இதேசமயம், புதிய GOLD CARD, CORPORATE GOLD CARD மற்றும் PLATINUM CARD திட்டங்களை டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள் மற்றும் வெளிநாட்டவர் மீதான கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் மாதம் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், டிரம்ப் அரசு புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்க குடியுரிமைக்கான வாய்ப்பை வழங்கும் GOLD CARD விசா 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.8.8 கோடி) விலையில் வழங்கப்படும். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு CORPORATE GOLD CARD 2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.17.5 கோடி) விலைக்கு கிடைக்கும். மேலும், எந்த விதமான வரி அல்லது வருமான நிபந்தனையுமின்றி, 270 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கும் PLATINUM CARD 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.44 கோடி) விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, இனி அமெரிக்காவில் வேலைக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர் ஆண்டுதோறும் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்ற புதிய உத்தரவும் அமலுக்கு வந்துள்ளது.