தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக 39 தொகுதிகளுக்கும் நேற்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இதில் 100% வாக்களிக்க மற்றும் சிரமம் இன்றி வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அவை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு மற்றும் 100 சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.