வங்கக்கடலில் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 27ஆம் தேதி வரை மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.