பிரேசில், வியட்நாம் போன்ற பகுதிகளில் இருந்து காபி இறக்குமதி செய்யப்படும் நிலையில் அங்கு காப்பி உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் பருவமழை குறைந்துள்ளதால் காபி உற்பத்தி பாதித்துள்ளது. இதனால் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காபி விளையும் சிக்கமகளூர் எஸ்டேட்களில் காபி கொட்டைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் ரோபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா காபி கொட்டைகள் 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. சிக்கமகளூர் பகுதியில் கால நிலை மாற்றத்தின் காரணமாக காபி உற்பத்தி பாதித்துள்ளதால் கடந்த ஆண்டு விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
அதேபோல விளைச்சல் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காத காரணத்தினால் இரண்டு அறுவடைகளுக்கு பதில் நான்கு சுற்றுகள் அறுவடை நடைபெற்றுள்ளன. மேலும் காபி பயிரிடுவதற்கு தொழிலாளர்கள் செலவில் இருந்து உரம், பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அனைத்தும் அதிகரித்து உள்ளன. தற்போது அரபிகாகாபியின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொஞ்சம் குறைவாக உள்ளதால் மக்கள் இதை மொத்தமாக வாங்குகிறார்கள். இதனால் விலை உயிரும் சூழ்நிலை உருவாகியுள்ளது என கூறியுள்ளனர்.