கொரோனா காலத்தில் உலகளவில் பிரபலமான ஸூம் தளம், தற்போது இந்தியாவில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஸூம் போன் சேவை என்ற இந்த புதிய சேவையை முதற்கட்டமாக புனே நகரில் பயன்படுத்தலாம். பின்னர் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த சேவை விரைவில் கிடைக்க உள்ளது.
ஸூம் தளத்தில் கட்டண சந்தா செலுத்தும் பயனர்கள் இந்த ஸூம் போன் சேவையை கூடுதல் கட்டணம் செலுத்தி பெறலாம். இந்த சேவையின் மூலம் ஸூம் தளத்திலிருந்தே நேரடியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது குறிப்பாக வணிக நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டு,இதற்கான அனுமதியை இந்திய அரசிடம் இருந்து பெற்ற ஸூம் நிறுவனம், தற்போது இந்த புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.