நேற்றைய வர்த்தகத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சந்தை மதிப்பு 2.34 பில்லியன் AED ஐ தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி செக்யூரிட்டி எக்ஸ்சேஞ்ச் மற்றும் துபாய் பைனான்சியல் மார்க்கெட் ஆகியவற்றில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த சந்தை மதிப்பு 3. 612 ட்ரில்லியன் AED ஆக பதிவாகியுள்ளது. உலக அளவில், ஐக்கிய வரப்பு அமீரகத்தின் சந்தை நடவடிக்கைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி சர்வதேச அளவிலும் எதிரொலித்ததாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்திய பங்குச் சந்தையிலும் நேற்று மிகப்பெரிய ஏற்றம் பதிவானது குறிப்பிடத்தக்கது.