வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கட்டண நிர்ணயக் குழுவுடன் கோரிக்கை வைத்துள்ளனர். செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணங்கள் உயர்த்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளன. மேலும் இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதே போன்று துணை மருத்துவ படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றப்பட உள்ளன. இது குறித்த புதிய கட்டண அறிவிப்பு செய்திகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போது பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 50,000 எனவும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 85 ஆயிரம் ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.