சென்னை விமான நிலையத்தில் புதிய 6 அடுக்கு பார்க்கிங் வசதியால் பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற டிசம்பர் மாதம் 4-ந்தேதி முதல் அதிநவீன 6 அடுக்கு பார்க்கிங் வசதி அறிமுகமாகிறது. இந்நிலையில் பார்க்கிங் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். புதிய பார்க்கிங்கில் இருசக்கர வாகனங்களை இரண்டு மணிநேரம் வரை நிறுத்த கட்டணம் ரூ.30 ஆகவும், கார்களை 30 நிமிடங்கள் வரை நிறுத்த ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், வேன் மற்றும் டெம்போ வாகனங்களை 30 நிமிடங்கள் வரை நிறுத்த ரூ.300 ஆகவும், பஸ் மற்றும் டிரக்குகளை 2 மணிநேரம் வரை நிறுத்த ரூ.600 ஆகவும் ஒரு நாள் கட்டணமாக 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.