பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் நடைபெற உள்ள அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தடைந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தடைந்து உள்ளார். இதற்காக இவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை விமானப்படைத்தளத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூர் புறப்பட்டார். இவரின் வருகையொட்டி 4500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.