மாற்றுத்திறனாளிகளுக்கு 17 ரயில் நிலையங்களில் சிறப்பு வசதிகள்

October 7, 2023

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நிசான் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போல மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் 17 ரயில் நிலையங்களில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பார்வைத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி வழிகாட்டு வரைபடங்கள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்காக ஏறி, இறங்குவதற்கு தேவையான சாய்வு தள அமைப்பு ஆகியவை தெற்கு ரயில்வே மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதை போல் சென்னை […]

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நிசான் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போல மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் 17 ரயில் நிலையங்களில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பார்வைத் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி வழிகாட்டு வரைபடங்கள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்காக ஏறி, இறங்குவதற்கு தேவையான சாய்வு தள அமைப்பு ஆகியவை தெற்கு ரயில்வே மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதை போல் சென்னை கடற்கரை, காஞ்சி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட 17 ரயில் நிலையங்களிலும் இந்த சிறப்பு பணிகளை ஏற்படுத்த நிசான் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தி வந்தது. தற்போது இதன் மூன்றாவது வட்டமாக 17 ரயில் நிலையங்களில் வசதிகள் மேம்படுத்தப்பட்ட உள்ளன. இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ரயில் நிலையங்களை உருவாக்க முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu