ஈரான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

February 7, 2024

ஈரான் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இனிமேல் விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், குறிப்பிட்ட சில நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் மட்டுமே இது செல்லுபடியாகும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரானுக்குள் செல்ல விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய நிபந்தனைகள்: சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழையலாம். […]

ஈரான் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இனிமேல் விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், குறிப்பிட்ட சில நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் மட்டுமே இது செல்லுபடியாகும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரானுக்குள் செல்ல விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய நிபந்தனைகள்: சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழையலாம். மேலும், அதிகபட்சமாக 15 நாட்கள் வரை மட்டுமே ஈரானில் தங்கி இருக்க முடியும். அத்துடன், விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைவதற்கு வான்வழிப் போக்குவரத்து மட்டுமே பொருந்தும். வேறு மார்க்கமாக ஈரானுக்குள் நுழையும் இந்தியர்களுக்கு விசா கட்டாயம் தேவை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu